திருச்சிக்கு மேற்கே 8 கி. மீ. தொலைவில் உள்ளது.
இத்தலம் குமார வயலூர் என்றும் அழைக்கப்படுகிறது. கோயிலுக்கு முன்பாக குமாரத் தீர்த்தம் உள்ளது. தலவிருட்சம் வன்னி மரம். முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். திருவண்ணாமலையில் அருணகிரிப் பெருமானை தடுத்தாட்கொண்ட முருகப்பெருமான் அவரை வயலூருக்கு வரும்படி பணித்தார். முருகப்பெருமான் தனது வேலினால் உண்டாக்கிய 'சக்தி தீர்த்தம்' என்னும் திருக்குளத்தில் நீராடி கோயிலில் சென்று பொய்யாக்கணபதி முன் 'கைத்தல நிறைகனி' என்ற பாடலைப் பாடினார். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் இத்தலத்து முருகனால் ஆட்கொள்ளப்பட்டார். |